search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஹேந்திரா மொராசோ"

    மஹேந்திரா நிறுவனத்தின் மராசோ எஸ்.யு.வி. காரின் இன்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். #mahindramarazzo #automobile


    மஹிந்திரா நிறுவனம் மூன்று எஸ்.யு.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்.யு.வி. மாடல்கள் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, டாடா நெக்சன், டொயோட்டா பார்ச்சூனக், ஃபோர்டு என்டேவர் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் மஹிந்திரா மராசோ முதலில் வெளியாகும் என்றும் இந்த கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. U321 என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மராசோ என்ற வார்த்தைக்கு ஸ்பெயின் மொழியில் ஷார்க் என அர்த்தமாகும். இந்த ஷார்க் உருவத்தை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.  

    புதிய கார் தற்போதைய மஹிந்திரா மாடல்களுக்கு மாற்றாக அமையாமல், புதிய காராக வெளியாகிறது. மராசோ தோற்றம் சார்ந்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், டேஷ்போர்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்சமயம் கிடைத்திருக்கும் புகைப்படங்களின் படி மஹிந்திரா மராசோ மாடலில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.



    இதன் உள்புறங்களில் XUV மாடலை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மராசோ 7 மற்றும் 8 சீட்டர் லே-அவுட் கொண்டிருக்கும் என்றும் இதன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிட்ஸம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பியானோ பிளாக் பேனலிங் மற்றும் புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலின் இருக்கைகளில் பிரீமியம் லெதர் டிராப்களால் செய்யப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டாவுக்கு போட்டியாகும் என்பதால், மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற மஹிந்திரா வாகனங்களை விட அதிகளவு இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Overdrive, Rushlane
    ×